பாஜகவில் இணையப்போகிறீர்களா என்று கேட்ட செய்தியாளர்களை பார்த்து முட்டாள்கள் என்று ஓ.பி.எஸ் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
முட்டாள்கள்! மதுரையில் செய்தியாளர்கள் மீது பாய்ந்த ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் முனுசாமி வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ஓ.பி.எஸ். பாஜகவில் இணையப் போவதாக ஐ.பெரியசாமி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்வியால் ஓ.பி.எஸ் ஆவேசம் அடைந்தார். உங்கள் கேள்வி முட்டாள் தனமானது என்று ஆத்திரத்துடன் ஓபிஎஸ் பதில் அளித்தார். அப்போது குறுக்கிட்ட அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, சிண்டு முடிய வேண்டாம் என்று செய்தியாளர்களை கண்டித்தார்.
மேலும் ஒரு கட்சித் தலைவராக இருப்பவர் எப்படி இன்னொரு கட்சிக்குப் போவார் என்று செய்தியாளர்களை பார்த்து முனுசாமி ஆவேசத்துடன் கேட்டார். அப்போது பேசிய ஓ.பி.எஸ் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டீர்களா என செய்தியாளர்களை பார்த்து கிண்டல் செய்தார்.