பிக்பாஸ் வீட்டிற்குள் 8 பேர் சேர்ந்து செய்தது என்ன? பைனலுக்கு முதல் நாள் மதுமிதா வெளியிட்ட வீடியோ! கண்ணீர் வருவது நிச்சயம்!

பிக் பாஸ் சீசன்3 நிகழ்ச்சியில் , 8 பேர் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்திய வீடியோ ஒன்றை தற்போது ட்விட்டர் பக்கத்தில் நடிகை மதுமிதா வெளியிட்டுள்ளார்.


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது கடந்த ஜூன் மாதம் 15 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் நடிகை மதுமிதா ஒருவராவார். தற்போது இந்த போட்டியானது இறுதி நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது நடிகை மதுமிதா தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னை 8 பேர் சேர்ந்து கொடுமைபடுத்தியதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நிகழ்ச்சி ஆரம்பித்தது முதலே மதுமிதா மிகவும் நன்றாக விளையாடி ரசிகர்களை தன் வசப்படுத்தினார். பைனல் சொல் செல்வதற்கு எல்லாவித தகுதிகளும் இருந்தும் திடிரென்று இந்த போட்டியை விட்டு வெளியேறியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மற்றவர்களுடன் மதுமிதாவுக்கு ஏற்பட்ட சண்டையின் காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறி இந்த போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து அவர் போலீசில் சென்று புகார் அளித்தார் . ஆனால் விஜய் டிவி நிர்வாகமும் சரி கமலஹாசனும் சரி தன்னை கொடுமை படுத்திய அந்த 8 பேர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் நடிகை மதுமிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறிவந்தார். 

இந்நிலையில் தன்னை 8 பேர் சேர்ந்து கொடுமைப்படுத்தி அதற்கான ட்ரெய்லர் வீடியோவாக ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை மதுமிதா. இது வெறும் டிரைலர் மட்டும் தான் மெயின் பிக்சர் இன்னும் காட்டப்படவில்லை . பார்த்தால் நம் கண்களில் கண்ணீர் குளமாய் வருமென்று குறிப்பிட்டிருந்தார் நடிகை மதுமிதா.