சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற மதுரை பாந்தர்ஸ் அணி!

மதுரை பாந்தர்ஸ் அணி TNPL போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வென்றது .


முதலில் பேட் செய்த திருச்சி வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது .அந்த அணியின் முரளி விஜய் ஆட்டமிழக்காமல் 78 ரன்களை விளாசினார் .

பின்னர் களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது . போட்டி டிராவில் முடிந்தால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது .

முதலில் சூப்பர் ஓவரில் ஆடிய மதுரை அணி  12 ரன்கள் எடுத்தது .

13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 3 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது .