சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை சம்பவம் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி !

மதுரை பாந்தர்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


முதலில் பேட் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி      சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது .அந்த அணியின் அருண் கார்த்திக் மற்றும் சந்திரன் 39 ரன்களை விளாசினர் . இதனால் மதுரை பாந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது .

பின்னர் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியினர் மதுரை  அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர் . இதனால் மதுரை பாந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது .

அந்த அணியின் சசிதேவ் அதிகபட்சமாக 51 ரன்களை எடுத்தார் . இதன் மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில்  சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிஅணியை அபாரமாக வென்றுள்ளது .