முதலிரவு அறையில் இருந்து வந்த மணமகளின் அலறல் சத்தம்! பதறிய உறவினர்களிடம் சிரித்துக்கொண்டே மணமகன் சொன்ன காரணம்! திருவள்ளுவர் திகுதிகு;

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் முதலிரவில் மனைவியை கடப்பாரையால் குத்தி கொலை செய்துள்ள சம்பவமானது திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூர் சடையான் குப்பம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு சந்தியா என்ற 22 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீஞ்சூரை சேர்ந்த நீதிவாசன் என்பவருடன் ஜனவரி மாதத்தில் திருமணம் நடைபெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சில பல காரணங்களுக்காக தொடர்ந்து திருமணம் தடைப்பட்டு வந்தது.

மேலும் ஊரடங்கு காரணமாகவும் திருமணம் தள்ளி வைக்கப்பட்டு வந்தது. நிச்சயதார்த்தம் ஏற்கனவே நடந்து முடிந்ததால் இருவரும் செல்ஃபோனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்நிலையில் இருவீட்டாரும் முடிவெடுத்து இன்று மணமகன் வீட்டில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

முதலிரவும் மணமகன் வீட்டிலேயே நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. முதலிரவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள் விசாரிக்கையில் விளையாட்டுக்கு அலறியதாக நீதியரசன் கூறியுள்ளார். அவருடைய பதிலை கேட்டு உறவினர்கள் சமாதானம் அடைந்தனர். 

ஆனால் சிறிது நேரத்திலேயே வேட்டியை மடித்து நீதிவாசன் வீட்டை விட்டு அலறியடித்து ஓடி வெளியேறிவிட்டார். பின்னர் குடும்பத்தினர் முதலிரவு அறைக்குள் சென்று பார்த்தபோது சந்தியா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உறவினர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. 

பின்னர் உறவினர்கள் நீதிவாசனை தேடி வந்தனர். நீதி வாசன் அப்பகுதியில் உள்ள ஒரு பெரிய ஆலமரத்தில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை உறவினர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது, நீதிவாசன் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், ஊரடங்கு காலத்தில் மாத்திரை மருந்துகளை சரியாக சாப்பிடாமல் இருந்ததால் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். அதனால் மனநலம் குன்றிய நிலையில் நீதிவாசன் தன் மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.