சுங்கச்சாவடி ஊழியர்களுடன் தகராறு - ஊழியர்கள் மீது அசுரவேகத்தில் மோதிய கார்

சுங்கச்சாவடியில் ஏற்பட்ட தகராறின் காரணமாக ஊழியர்கள் மீது ஈவிரக்கமின்றி ஓட்டுநரொருவர் காரையேற்றி  கொலை செய்திருக்கும் சம்பவமானது ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.


ராஜஸ்தான் மாநிலத்தில் கிஷண்கார் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இன்று காலை கார் ஒன்று சுங்கச்சாவடிக்கு வந்தது. அந்த கார் வேகமாக வந்ததால் சுங்கச்சாவடியின் இரும்பு தடுப்பின் மீது மோதியுள்ளது. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் கார் ஓட்டுநருக்கும் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதத்தினால் மிகவும் ஆத்திரமடைந்துள்ளார். ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் தன் காரை முன்னும் பின்னுமாக பல முறை வேகமாக நகர்த்தினார். அப்போது அங்கிருந்த பல்வேறு சுங்கச்சாவடி ஊழியர்கள் படுகாயமடைந்தனர். மேலும் காரை நிறுத்தாமல் அவ்விடத்திலிருந்து அவர் புறப்பட்டு சென்றுவிட்டார். சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒன்றுதிரண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்த ஓட்டுநர் மீது புகாரளித்தனர். 

சுங்கச் சாவடியில் பதிவான சிசிடிவி கேமராக்கள் மூலம் கார் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.