ஜோடி போட்டு நீதிமன்றம் வந்த செந்தில் பாலாஜி - ஜோதிமணி! ஏன் தெரியுமா?

கரூரில் மாவட்ட ஆட்சியரை வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் எம்.பி ஜோதிமணி, திமுக எம் எல் ஏ செந்தில் பாலாஜி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.


காங்கிரஸ் எம் பி ஜோதிமணி மற்றும் அவரது வழக்கறிஞர் செந்தில் குமார் இருவரும் சில நாட்களுக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அன்பழகனை நேரில் சந்தித்து மக்கள் பிரச்சனை குறித்து மனு அளிக்க சென்றதாக கூறப்படும் நிலையில், மாவட்ட ஆட்சியர் காங்கிரஸ் எம்.பி அவரது வழக்கறிஞர் செந்தில் குமார் மற்றும் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி உட்பட 50 பேர் மீது வீடு புகுந்து தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக புகார் அளித்தார்.

இது தொடர்பான வழக்கு இன்று கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை க்கு வந்தது, அதற்காக எம் எல் ஏ செந்தில் பாலாஜி, எம். பி ஜோதிமணி மற்றும் வழக்கறிஞர் செந்தில் குமார் உள்ளிட்ட மூவரும்  நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகார்த்தி முன்பு ஆஜராகினர்.

இதற்கிடையில், நேற்று மாவட்ட ஆட்சியர் தனது போன் நம்பரை பிளாக் செய்து வைத்துள்ளதாக எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு வைத்ததும் குறிப்பிடத்தக்கது.