எம்.பி தேர்தல்! கனிமொழியுடன் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம் நடைபெற்றது.


மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக  தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம், 2-2-2019, காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக  தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரான, முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு - துணைப் பொதுச்செயலாளர்கள் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி - மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி, எம்.பி., -  கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் திருச்சி சிவா, எம்.பி., ஆ.இராசா,   - டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., மற்றும் பேராசிரியர் அ.இராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.