ரஜினிகாந்த் மனதை மாற்றிக்கொள்வார்..! நம்பிக்கையுடன் ஸ்டாலின். டென்ஷனுடன் உதயநிதி

இன்று கோவளம் பேருந்து நிலையம் அருகே, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஸ்டாலின் கையெழுத்துப் போராட்டம் நடத்துவதற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து ரஜினி மீது நம்பிக்கை தெரிவித்தார்.


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததும் போராடும் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளாரே என்று ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு பதில் சொன்ன ஸ்டாலின், மாணவர்கள் ஆராய்ந்து, சிந்தித்து போராட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருப்பது முதலில் அவர் இந்த சட்டத்திருத்த்தினால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என ஆய்ந்து,ஆ ராய்ந்து, சிந்தித்து பதில் அளித்திருக்க வேண்டும்..

அப்படி இந்த சட்டத்திருத்தத்தினால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை அவர் உணர்ந்தால் ஒருவேளை அவர் கூறிய கருத்தை மாற்றிக் சொல்லுவார் என நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால், உதயநிதியோ ரஜினியை திட்டுவதில் இன்னமும் உறுதியாக இருக்கிறார். விடாமல் நேரடியாகவே திட்டத் தொடங்கிவிட்டார்.