எம்.ஜி.ஆருக்கு முந்தைய காலம் வரையிலும் தமிழகம் முழுவதும் சுமார் 17,000 ரேசன் கடைகள் இருந்தன. ஆனால் அந்த ரேசன் கடைகள் தனியார் கடைகளில்தான் இயங்கிவந்தன.
ரேசன் கடையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் புரட்சிதான், அவரது வெற்றிக்குக் காரணமா..?
அதனால் பொதுமக்களுக்குச் சேரவேண்டிய ரேசன் பொருட்கள், வெளிச்சந்தையில் கொள்ளை விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.
எம்.ஜி.ஆர். பதவிக்கு வந்ததும் ரேசன் கடையில் மெகா சீர்திருத்தம் செய்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்திவந்த அனைத்து கடைகளும் கூட்டுறவுத் துறைக்கு மாற்றம் செய்தார். 1980-ம் ஆண்டு தமிழகமெங்கும் சுமார் 22,000 முழு நேர ரேசன் கடைகள் திறக்கப்பட்டன. 2 கிலோமீட்டருக்கு அதிக தூரமுள்ள இடங்களில் பகுதி நேர நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான ரேசன் அட்டை வழங்கப்பட்டு, அனைவருக்கும் நியாயவிலைக் கடைகளில் மானியவிலையில் பொருட்கள் வழங்கப்பட்டன.
எம்.ஜி.ஆர். காலத்தில் 1 நபருக்கு 4 கிலோ அரிசி வழங்கப்பட்டது. குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 12 கிலோ என்றும் அதிகபட்சம் 20 கிலோ என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோன்று சர்க்கரை நபர் 1க்கு அரை கிலோ என்று அதிகபட்சம் 2 கிலோ சர்க்கரை வழங்கப்பட்டது. மண்ணெண்ணெய் 3 லிட்டர் முதல் 10 லிட்டர் வரை வழங்கப்பட்டது. நியாயவிலைக் கடைகளில் முதன்முதலாக பாமாயில் 2 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை வழங்கப்பட்டது.
தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் இல்லை என்று சொல்லப்படாமல் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டன. அதனால்தான் நியாயவிலைக் கடைகளை நடத்துவதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதி பாராட்டினார்.
தற்போது தமிழகத்தில் 33,222 நியாயவிலைக் கடைகள் முழுநேரம் மற்றும் பகுதிநேரமாக இயங்கிவருகின்றன. தமிழகம் முழுவதும் 1.98 கோடி ரேசன் அட்டைகள் இருக்கின்றன. திமுக ஆட்சியில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் என போடப்பட்டது. புரட்சித்தலைவி ஜெயலலிதா காலம் முதல் 20 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது.