திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல் தோல்வி ! அசத்தல் வெற்றி பெற்ற லைகா கோவை கிங்ஸ் !

லைகா கோவை கிங்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வென்றுள்ளது .


முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது .அந்த அணியின்  ரஞ்சன் பால் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார் .திண்டுக்கல்  அணியின் ப்ரனேஷ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய திண்டுக்கல் அணியின் பேட்ஸ்மேன்கள் லைகா கோவை கிங்ஸ் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர் . இதனால் திண்டுக்கல் அணியினர் அனைத்து விக்கெட்களையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தனர் . அந்த அணியின் சுஜய் மட்டும் அதிகபட்சமாக  34 ரன்கள் எடுத்தார். 

 கோவை  கிங்ஸ் அணியின் மணிகண்டன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு வழி வழிவகுத்தார் .