அதற்குள் அவசரம்! காட்டுக்குள் காதல் ஜோடி சடலம்! திருமணத்திற்கு பெற்றோர் ஓகே சொல்லியும் விபரீத முடிவெடுத்த மர்மம் என்ன?

தர்மபுரி மாவட்டத்தில் இருவரது பெற்றோரும் காதலுக்கு பச்சைகொடி காட்டிய போதிலும் உடனடியாக திருமணம் செய்து வைக்கவில்லை என்ற சோகத்தில் காதல் ஜோடி ஒன்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிபட்டி என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு வசித்து வரும் தினக்கூலியான சவுரி நாதன் என்பவரின் மகள் தான் சோபியா. இவருக்கு வயது 21. இவர் அருகில் இருக்கும் தனியார் கல்லூரியில் பரதநாட்டியம் பயின்று வருகிறார். சோபியாவின் உறவினரான ராஜா என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் அருகில் வசித்து வந்துள்ளார். ராஜாவின் மகன் பெயர் ஆனந்தராஜ்( வயது 22). இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. இரண்டு குடும்பத்தினரும் உறவினர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு எந்தவித தடையுமின்றி பச்சை கொடி காட்டப் பட்டுள்ளது. இருவரது பெற்றோரும் தற்போது நிலவிவரும் கொரோணா பிரச்சினை முடிவுக்கு வந்ததும் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து உள்ளனர். இருவரது குடும்பமும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்ட நிலையிலும் திடீரென்று இன்று காலை சோபியாவும் ஆனந்தராஜூம் அருகில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனைக்கு பின்புறத்தில் இருக்கும் வனப்பகுதியில் உயிரிழந்து பிணமாகக் இருந்துள்ளனர்.

அவ்வழியாக சென்றவர்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவர்களது வீட்டிற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து வந்த அவர்களின் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு இருவீட்டாரும் ஒப்புக் கொண்ட பின்னரும் எதற்காக இந்த காதல் ஜோடி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர் என்று அனைவரும் குழம்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் வழங்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார் உடனடியாக உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த தற்கொலைக்கான காரணங்களின் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.