அப்பா இல்லாத பெண்! காதலர் தினத்தில் காதலனுடன் பைக் ரெய்டு! நொடியில் அரங்கேறிய பயங்கரம்!

தந்தையில்லாத பெண் காதலர் தினத்தன்று உயிரிழந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவினாய்குமார். இவருடைய மனைவியின் பெயர் துளசி. இத்தம்பதியினருக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆர்த்தி என்ற 19 வயது மகள் உள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் "மைக்ரோ பையாலஜி" பட்டப்படிப்பில் 2-வது ஆண்டு பயின்று வந்தார்.

இவர் சில ஆண்டுகளாக அசோக் என்ற 25 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். காதலர் தினத்திற்கு முந்தினம் ஆர்த்தியின் பிறந்த நாளாகும். ஆதலால் பிறந்த நாளை காதலர் தினத்தன்று விமர்சையாக கொண்டாட இருவரும் முடிவெடுத்தனர். அதன்படி இருவரும் இருசக்கர வாகனத்தில் பெங்களூருவுக்கு செல்ல முடிவெடுத்தனர். 

நெடுஞ்சாலையில் மிகவேகமாக இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது இவர்கள் வேகமாக மோதியுள்ளன. மோதிய அதிர்ச்சியில் இருவரும் பறந்து கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி ஆர்த்தியின் மீது ஏறியுள்ளது. 

இதனால் சம்பவயிடத்திலேயே ஆர்த்தி உயிரிழந்தார். அசோக் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஆர்த்தி உடனே பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், சில வருடங்களுக்கு முன்னர் ஆர்த்தியின் தந்தை உயிரிழந்ததாகவும், தாய் அரவணைப்பில் வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. தன் கண் முன்னே காதலி ஆர்த்தி இறந்து போனதால், அசோக் கதறி அழுத காட்சிகள் இன்னும் கண் முன்னே நிற்கின்றன.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.