ஆற்றில் இறங்கிய காதல் ஜோடிக்கு நேர்ந்த பகீர் விபரீதம்! பாளையங்கோட்டை பரிதாபம்!

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி காதல்ஜோடி இறந்துபோன சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பாளையங்கோட்டையில் செந்தில்நகர் என்னும் இடமுள்ளது. இப்பகுதி சேர்ந்தவர் சங்கரநயனார். யார் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு அதே கல்லூரியில் பயிலும் வனிதா என்ற பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில் கல்லூரிக்கு செல்லாமல் வெளியே சுற்றித்திரிந்து உள்ளனர். அதன்படி நேற்று காலை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராவிதமாக வனிதா சுழலில் சிக்கினார். அவரை காப்பாற்றுவதற்காக சங்கரநாயனார் ஆற்றில் குதித்தார். ஆனால் இருவருக்குமே நீச்சல் தெரியாததால் ஆற்றின் சுழலில் சிக்கி மூழ்கினர்.

ஆற்றல் மூழ்குவதை கண்ட அருகில் இருந்தவர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தாமிரபரணி ஆற்றுக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் 3 மணி நேரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இறுதியாக இருவரும் இறந்த சடலத்தை மீட்டெடுத்தனர். இந்த சம்பவமானது தாமிரபரணி ஆற்றங்கரையில் சோகத்தை ஏற்படுத்தியது.