பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு இலங்கையில் ஒரு காதலரா? சற்று முன் கசிந்த தகவல்! அப்போது கவின்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று வரும் லாஸ்லியாவிற்கு பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே ஏற்கனவே ஒரு காதலர் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


பிக் பாஸ் சீசன் 3 இல் ஆரம்பம் முதலே லாஸ்லியா எந்த பிரச்சனைகளிலும் தலையிடாமல் இருந்ததாலும் , மேலும் துருதுருவென்று பிக்பாஸ் வீட்டில் செயல்பட்டு வந்ததாலும் லாஸ்லியாவிற்கு ரசிகர் பட்டாளம் குவிந்தது . ஆனால் கவின் உடன் ஏற்பட்ட காதல் காரணமாக லாஸ்லியா பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி வருகிறார் .

மேலும் சேரனின் அன்பை சந்தேகப்பட்ட தாலும் மக்களிடையே லாஸ்லியாவின் செல்வாக்கு குறைந்து வருகிறது . இந்நிலையில் லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே ஒரு காதலன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் பெயர் தர்ஷன் எனவும் , அவர் இலங்கையில் உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது . மேலும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் தர்ஷன் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது . லாஸ்லியாவிற்கு உண்மையாகவே பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே காதலர் இருக்கிறாரா இல்லையா என்ற உண்மையை அவர்தான் உறுதிப்படுத்தவேண்டும் .