தமிழகம் முழுவதும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு..! ஆனால்? எடப்பாடியார் போட்ட கண்டிசன்கள்!

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு இதே போல் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதன்படி மக்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால்இ பாஸ் கட்டாயம். அதே சமயம் சென்னையில் முழு ஊரடங்கு வரும் 5ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

6ந் தேதி முதல் முன்பிருந்த ஊரடங்கு நீடிக்கும். அதாவது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதற்கு முன்பிருந்த நிலை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுரில் உள்ள சென்னை காவல் எல்லை மாவட்ட பகுதிகளில நீடிக்கும். அதே சமயம் ஜூலை 5 ஆம் தேதி முதல் 4 ஞாயிற்றுகிழமைகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்,

ஜூலை 5, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு.  இறைச்சிக்கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஜூலை 15ந்தேதி வரை பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. கிராமப்புறங்களில் சிறிய கோயில்களை திறக்க அனுமதி.

கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான கோயில், மசூதி, தேவாலயத்தில் பொதுமக்கள் தரிசனம் அனுமதி. மேற்கு வங்கம், மணிப்பூர், மகாராஷ்டிரா மாநநிலங்களை தொடர்ந்து 4வது மாநிலமாக தமிழகத்திலும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது