திருவிழாவிற்கு தயாராகுங்கள்! நாளை வெளியாகிறது உள்ளாட்சித் தேர்தல் தேதி!

பரபரப்பான தமிழக அரசியலில் உள்ளாட்சித் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் தேதியை டிசம்பர் 13-ம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்திருந்தது.இதற்கு மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் இரண்டாம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று உச்சநீதிமன்றத்தில் அறிவித்திருந்தது.

 இதுதொடர்பாக செய்தியாளர்களிடம்  பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி டிசம்பர் முதல் வாரத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் தேதி அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே கூறியிருந்தோம்.

தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் முடிந்துவிட்டால் நாளை கூட உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கலாம் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.