தமிழகத்தைப் போலவே ஒடிசா மாநிலத்திலும் நீட் தேர்வுக்குப் பயந்து மாணவி ஒருவர் தற்கொலை! என்னப்பா நடக்குது இங்கே..?

நீட் தேர்வுக்குப் பயந்து தமிழகத்தில் மட்டுமே மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதாக திட்டமிட்டு ஒரு வதந்தி பரப்பப்படுகிறது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தான் உண்மை.


ஏனெனில், தமிழகத்தைப் போலவே ஒடிசா மாநிலத்திலும் நீட் தேர்வுக்குப் பயந்து மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்துக்கு உட்பட்ட பரிபடா பகுதியை சேர்ந்த உபசனா சாகு என்ற 18 வயது மாணவிதான் தற்கொலை செய்துள்ளார். இவர், . நீராஜஸ்தானில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் நீட்தேர்வுக்காக தீவிர பயிற்சி எடுத்துக்கொண்டார்.

கடந்த மே மாதம் சொந்த ஊருக்குத் திரும்பிய சாகு உபாணா, நேற்று முன்தினம் இரவு திடீரென வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது மாணவி உபசனா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது.

அதில், 'நீட்' தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தால் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்ததாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியா முழுவதும் மாணவர்களின் ரத்தம் குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும்.