எம்.ஜி.ஆரைப் போலவே அரசு சலுகைகள் மறுப்பு

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் அரசு இல்லத்தை ஏற்கவில்லை, அரசு காரை பயன்படுத்தவில்லை. எந்த அரசு சலுகைகளையும் அவர் பெற்றுக்கொண்டதே இல்லை. எம்.ஜி.ஆரிடம் அரசியல் பயின்ற சைதை துரைசாமியும் தன்னுடைய சொந்த வாகனம், சொந்த டிரைவர், சொந்த செலவில் பெட்ரோல் என்று மாநகராட்சிக்கு 1 ரூபாய் கூட செலவு வைக்காமல் நடந்துகொண்டார்.


- என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 16

சைதை துரைசாமி மேயராக பதவி ஏற்றுக்கொண்ட பிறகும் தன்னுடைய சொந்த வாகனத்திலே மாநகராட்சிக்கு வந்துகொண்டு இருந்தார். இதைக் கண்டு அரசியல்வாதிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆச்சர்யமானார்கள். அரசு இன்னமும் வாகனம் தரவில்லையா என்று சிலர் கேள்வியும் எழுப்பினார்கள். அதன் பிறகே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை வாழ்ந்து வழிகாட்டிய பாதையில் சைதை துரைசாமி நடந்துகொள்கிறார் என்பதை அறிந்து நெகிழ்ந்து போனார்கள்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் அரசு இல்லத்தை ஏற்கவில்லை, அரசு காரை பயன்படுத்தவில்லை. எந்த அரசு சலுகைகளையும் அவர் பெற்றுக்கொண்டதே இல்லை என்பதுடன் முதல்வரான பிறகு ஒரு சொத்து கூட வாங்கியதும் இல்லை.

எம்.ஜி.ஆரிடம் அரசியல் பயின்ற சைதை துரைசாமியும் தன்னுடைய சொந்த வாகனத்தையே மேயர் காலம் முழுக்க பயன்படுத்தினார். சொந்த டிரைவர், சொந்த செலவில் பெட்ரோல் என்று எல்லாமே தன்னுடைய சொந்த செலவில் செய்தார். மாநகராட்சிப் பணியாளர்களை வீட்டு பணிக்கு வைத்துக்கொள்ளவில்லை. அரசு தொலைபேசியும் பெற்றுக்கொள்ளவில்லை.

மாநகராட்சிக்கு சைதை துரைசாமியை தேடி வரும் மனுதாரர்கள், நண்பர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகிய எல்லோருக்கும் தன்னுடைய சொந்த செலவில் சுக்குமல்லி காபி கொடுத்துவந்தார். தினமும் வீட்டிலேயே சுக்குமல்லி கருப்பட்டி காபி தயார் செய்து கொண்டுவருவார்.

அதோடு அலுவலக வேலைக்குச் செல்லும் ஊழியர் போன்று கையோடு உணவும் கட்டிக்கொண்டு வந்து விடுவார். சைதை துரைசாமிக்கு காபி, டீ, குளிர்பானம் குடிக்கும் பழக்கும் இல்லை என்பதால் அவர் மேயராக இருந்த காலத்தில் மாநகராட்சிக்கு ஒரு ரூபாய் கூட செலவு வைத்ததே இல்லை.

மேயராக இருந்த காலகட்டத்தில் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர், சீனாவுக்குச் செல்ல நேர்ந்தது. அந்த நேரத்திலும் தன்னுடைய விமானப் பயணத்துக்கான கட்டணத்தை சொந்த செலவில் செய்துகொண்டார். இதை அறிந்த ஜெயலலிதா மிகவும் ஆச்சர்யமாகி நேரில் கூப்பிட்டு பாராட்டு தெரிவித்தார். பதவியைப் பயன்படுத்தி எந்த ஒரு சலுகையும் பெறுவதில்லை என்பதில் ஐந்து ஆண்டு காலமும் உறுதியாக இருந்தார் சைதை துரைசாமி. அதனாலே அவர் மீது எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் எழவே இல்லை.

சைதை துரைசாமி வழங்கிய சுக்குமல்லி கருப்பட்டி காபியின் நீட்சியாக சென்னை மாநகராட்சியில் மூலிகை உணவகம் ஒன்று தொடங்கப்பட்டது.

- நாளை பார்க்கலாம்.