அமெரிக்காவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஒரே பாலினத்தை சேர்ந்த பெண்கள் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போ தான் நிச்சயதார்த்தம் செஞ்சாங்க..! காரில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த ஓரினச்சேர்க்கை பெண்கள்! பதற வைக்கும் சம்பவம்!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_21072_1_medium_thumb.jpg)
27 வயதான ஸ்டீஃபானி மயோர்கா மற்றும் 25 வயதான பைஜ் எஸ்கலேரா ஆகிய இருவரும் கடந்த மாதம் 25ஆம் தேதி மாயம் ஆவதற்கு முன்னர் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் உள்ள இருவரின் நண்பர்களையும் முடக்கினர். இதில் வரும் மாயமாகும் முன்னர் தங்களது லேப்டாப் , மொபைல் போன் , கைக்கடிகாரம் போன்ற எவற்றையும் எடுத்து செல்லவில்லை. அதுமட்டுமின்றி அவர்கள் மாயமான பின்னர் அவர்கள் தங்களுடைய வங்கி கடன் அடையும் பயன் படுத்தவில்லை எனவும் அதிகாரிகளால் உறுதி படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஓரினசேர்க்கை பெண்கள் இருவரும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. நிச்சயதார்த்தத்துக்கு பிறகு இவர்கள் புதிய குடியிருப்புக்கு மாறிவிட்டதாகவும் உறவினர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கள் அன்று வடகரோலினா மாகாணத்தில் மாலை 3 மணியளவில் இவர்களது சடலம் போலிஸாரால் கண்டறியப்பட்டது. காணாமல் போகும் போது இவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனத்திலேயே இவரது உடல் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன இவர்கள் இருவரின் உடலும் மிக மோசமான அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இவர்கள் கொலை செய்யப்பட்டார்களா இல்லையா போன்ற தகவல்களை கண்டறிய சில நாட்கள் தேவைப்படும் எனவும் போலீஸ் தரப்பு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.