கல்யாணம் ஆகி, குழந்தையும் இருக்கு..! ஆனாலும் காலேஜ் பேராசிரியையை உயிரோடு கொளுத்திய கொடூரம்! அதிர்ச்சி காரணம்!

கல்லூரி வளாகத்தின் வாசலிலேயே விரிவுரையாளர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவமானது மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு புகழ்ப்பெற்ற தனியார் கல்லூரியில் அங்கிதா பிசுடே என்ற இளம் பெண் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவருடைய வயது 25. இவருடைய பக்கத்து வீட்டில் விக்கி என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவருடைய வயது 27.

விக்கிக்கு ஏற்கனவே திருமணமாகி 7 மாதங்களான ஒரு கைக்குழந்தை உள்ளது. இதனிடையே விக்கிக்கு சங்கீதா மீது காதல் மலர்ந்துள்ளது. இந்த காதலை அவர் அங்கிதாவிடம் தெரிவித்தபோது, ஏற்கனவே திருமணமான காரணத்தினால் அங்கிதா விக்கியின் காதலை நிராகரித்துவிட்டார்.

இதனால் விக்கி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். மேலும் 3 மாதங்களுக்கு மேலாக அங்கிதா சென்று வந்த இடங்களுக்கெல்லாம் விக்கி அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் இதனைத் தாங்கிக்கொள்ள இயலாது அங்கிதா பொது இடத்தில் விக்கியை அவமானப்படுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் அங்கிதாவை பழி வாங்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். அதன்படி சென்ற வாரம் திங்கட்கிழமை அன்று காலை நேரத்தில் கல்லூரி வளாகத்தின் வாயிலிலேயே அங்கிதா மீது பெட்ரோல் ஊற்றி விக்கி தீ வைத்து எரித்துள்ளனர்.

அங்கிதாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 40 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வந்த அங்கிதா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

காவல்துறையினர் சம்பவத்தன்றே விக்கியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.