பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேனுக்கு கிடைத்தது எத்தனை கோடி வாக்குகள்? மலைக்க வைக்கும் தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக முகென் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


கடந்த 105 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது, நேற்று நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் முகென், சாண்டி மற்றும் லாஸ்லியா போட்டியிட்டனர். 4-வது இடத்தை பெற்று ஷெரின் வெளியேறினார்.

நிகழ்ச்சியின் கடைசி நாளான நேற்று முகென் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். 2-வது இடத்தில் சாண்டியும், 3-வது இடத்தில் லாஸ்லியாவும் வந்தனர். இறுதி வாரத்தில் போட்டியின் களத்திலிருந்த 4 பேருக்கும் மக்கள் அளித்த வாக்குகளின் எண்ணிக்கையானது நேற்று வெளியிடப்பட்டது.

இறுதி வாரத்தில் மட்டும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 20 கோடியே 53 லட்சமாக இருந்தது. முதலிடத்தை பெற்ற முகென் 7 கோடியே 64 லட்சம் வாக்குகளும், 2-வது இடத்தை பெற்ற சாண்டி 5 கோடியே 83 லட்சம் வாக்குகளும் பெற்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முகென் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். பல தரப்புகளில் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளன.

இந்த வெற்றியானது அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.