மாமியாரை தரையில் படுக்க வைத்து மருமகன் செய்த பகீர் சம்பவம்! நேரில் பார்த்த குழந்தைகள்! சேலம் அதிர்ச்சி!

சேலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட தனது சொந்த மாமியாரை மருமகன் கழுத்தில் காலால் மிதித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் பொரசமரத்து காடு பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரிக்கு 39 வயது ஆகின்றது. ராமசந்திரன் ஒரு லாரி டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மகேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், ராமச்சந்திரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று வீட்டில் தகராறில் இடுப்படுவது வழக்கம். அதனாலேயே மகேஸ்வரி அவரது அம்மா பழனியம்மாள் வீட்டிற்கு சென்றுவிடுவார். பழனியம்மாள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் கணவரை இழந்தவர். இந்நிலையில் ஒருநாள் திடீரென பழனியம்மாளுக்கு உடம்பு சரியில்லாமல் போகவும், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

அப்போது சிகிச்சை அளித்த மருத்துவர் உடம்பெல்லாம் காயங்கள் இருந்ததை பார்த்ததும், என்ன நடந்தது என்று கேட்டனர். அதற்கு கீழே விழுந்து விட்டதாக சொன்னார்கள். ஆனால் சிகிச்சை அளித்து, வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில், கடந்த 24-ம் தேதி பழனியம்மாள் இறந்துவிட்டார்.  

இதற்கிடையில், மகேஸ்வரியின் குழந்தைகள் அன்று வீட்டில் நடந்தை வெளியே சொல்ல இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. இதனை அறிந்த மகேஸ்வரி அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் புகாரின் அடிப்படையில், ராமச்சந்திரனை பிடித்து விசாரித்தார். அந்த விசாரணையில் தான் உண்மைகள் பல வெளியே வந்துள்ளது.

அதில் ராமச்சந்திரன் அளித்த வாக்குமூலத்தில் சம்பவம் நடந்த அன்று குடி போதையில் குழந்தைகளை மாமியார் அடித்ததால் மாமியாரை கீழே தள்ளிவிட்டு காலால் மிதித்தே கொன்றதாக தெரிவித்துள்ளார் ராமச்சந்திரன். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.