கணவன் வெளிநாட்டில்..! மாமனார் வீட்டில் தனிமையில் தவித்த மனைவி செய்த செயல்..! உண்மையை கண்டறிந்து அதிர்ந்த குடும்பம்!

உத்திரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவருடன் தங்களுடைய மருமகளுக்கு தவறான உறவு இருப்பதை அறிந்தவுடன், அந்தப் பெண்ணின் மாமனார் மாமியார் இருவரும் இணைந்து மருமகளுக்கும் அந்த இளைஞருக்கும் மூக்கை அறுத்து தண்டனை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தில் அயோத்தி என்ற மாவட்டத்தில் கொடூரமான செயல் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது இந்த பகுதியில் வசித்து வரும் ஒருவர் திருமணமாகி சில நாட்களிலேயே குடும்பச்சூழல் காரணமாகவும் பணி நிமித்தமாகவும் சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் அந்த நபரின் மனைவி தன்னுடைய மாமனார் மாமியார் வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.

தன் கணவன் தன்னுடன் இல்லாததால் வேறு ஒரு இளைஞருடன் பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறார். அதாவது 30 வயதாகும் அந்த பெண் 23 வயது இளைஞருடன் தவறான உறவில் ஈடுபட்டு வந்திருக்கிறார். சம்பவ தினத்தன்று அந்த இளைஞன் அந்தப் பெண்ணை பார்ப்பதற்காக அவருடைய மாமியார் இல்லத்திற்கு சென்று இருக்கிறார். அப்போது அந்த இளைஞரை பார்த்த மாமனாரும் மாமியாரும் கையும் களவுமாக பிடித்தனர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தவறான பழக்கத்தை அறிந்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர் . கோபத்தில் செய்வதறியாது இருவரையும் அருகில் இருந்த தூணில் கட்டி வைத்து அவர்களின் மூக்கை அறுத்து எறிந்தனர். இருவரும் மூக்கை அறுத்த உடன் மிகுந்த வலியை ஏற்படுத்தி பிடித்து வைத்தனர் இதனை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

மேலும் இந்த சம்பவத்தைப் பற்றி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் இந்த கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணின் மாமனார் மாமியார் ஆகியோரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.