சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு ராய் உடந்தையாக இருந்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகள் முறை சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரன்! உடந்தையாக இருந்த தாய்! நாமக்கல் பகீர்!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_20790_1_medium_thumb.jpg)
நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்க்குட்பட்ட எம்ஜிஆர் நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர் ஏற்கனவே திருமணமானவர். தன்னுடைய மனைவியை கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்தார்.
அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண்ணும் தன்னுடைய கணவரை பிரிந்து குமரேசனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். குமரேசனுக்கு அந்த இளம்பெண் மீது தவறான பார்வை இருந்து வந்துள்ளது. இதனை தன்னுடைய கள்ளக்காதலியுடன் தெரிவித்து, அவருடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கள்ளக்காதலியுடன் முறையிட்டுள்ளார்.
வேறு வழியின்றி அந்த பெண்ணும், தன்னுடைய மகளை குமரேசனிடம் உடலுறவு கொள்ள ஏற்பாடு செய்துள்ளார். அதன் பின்னர் மகள் கர்ப்பமானதை தொடர்ந்து இருவரும் அதனை கலைத்துவிட தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்களுக்கு இருவர் மீதும் சந்தேகம் வந்த காரணத்தினால் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தியது இருவரும் கையும் களவுமாக சிக்கி கொண்டனர். இருவரையும் கைது செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.