வீட்டிற்கு அருகே ஆளுயரத்தில் 20 கிலோ எடையில் மலைப் பாம்பு! அலேக்காக கைகளில் பிடித்து பெண்மணி செய்த செயல்!

20 கிலோ மலைப்பாம்பை கையில் பிடித்து பெண்ணொருவர் பையில் அடைத்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


வித்யா என்ற பெண் கேரள மாநில எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் பின்புறத்தில் புதர் மண்டி கிடந்துள்ளது. அந்த புதரில் ஆளுயர மலைப்பாம்பு மறைந்திருந்துள்ளது.

உடனடியாக வித்யா அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் பாம்பை பிடிப்பதற்கு ஆயத்தமானார். அதன்படி புதரில் மறைந்து கிடந்த பாம்பின் தலையை வித்யா பிடிக்க, அக்கம்பக்கத்தினர் அதன் வாலை பிடித்து வெளியே எடுத்தனர். 

அதன்பின்னர் வித்யா எவ்வித பயமுமின்றி மலைப்பாம்பை லாவகமாக கையாண்டு சாக்கு பைக்குள் போட்டு அடைத்தார். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் வித்யாவின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.