பெண்கள் வரிசையில் நின்று சரக்கு வாங்கும் ஊத்தங்கரை டாஸ்மாக் கடை! ஆண்கள் ஒதுங்கி நிற்கும் அவலம்!

டாஸ்மாக் கடைகளில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகின்றது.


பொழுது சாய ஆரம்பித்தவுடன் கூட்டம் அலை மோத தொடங்குகிறது. குடிமகன்கள் தங்கள் பணத்தை வீணாக்கி உடல்நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஆண்களை காட்டிலும் பெண்கள் அதீத ஈடுபாட்டோடு டாஸ்மாக் கடைகளில் குவிகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை‌ என்ற நகராட்சி  அமைந்துள்ளது. இந்த நகராட்சிக்கு உட்பட்ட சென்னப்பநாயக்கன்னூர் கிராமத்திற்கு அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் தான் இந்த அவலச் செயல் நடந்து வருகின்றது.

இந்த கிராமத்தில் ஆண்களை விட பெண்களே உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுவதாலே இந்த அவல நிலை நிகழ்கிறது. ஆதலால் தினமும் 20-க்கு மேற்பட்ட பெண்கள் இணைந்து வந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

இவ்வளவு ஏன், அந்த ஊர் குடிமகன்களே, இந்த பெண்களுக்கு பிறகு தான் பாட்டில்களை வாங்குகின்றனர். எந்த அளவிற்கு சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கின்றது என்பதை இந்த செய்திக்கு பின்பு நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.