குழந்தைன்னா சும்மா இல்லீங்க… இவ்ளோ தனித்தன்மையா ??

உயிர் உருவாவது உலகின் மாபெரும் ஆச்சர்யங்களில் ஒன்று. ஆணின் உயிரணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைந்து கரு உருவாகி, அது குழந்தையாக வளர்வது எப்பேர்ப்பட்ட இயற்கை அதிசயம். இப்படிப் பிறந்த குழந்தைகளின் சில தனித்தன்மைகள் இங்கே…


·         வளர்ந்த மனிதனுக்கு உடலில் 206 எலும்புகள் இருக்கின்றன. ஆனால் குழந்தைக்கோ 270 எலும்புகள் இருக்கின்றன.

·         குழந்தைகள் வளரும்போது மண்டையோடு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் உள்ள எலும்புகள் ஒன்றிணைந்து 206 எலும்புகளாகின்றன.

·         குழந்தைகளுக்கு உச்சந்தலையில் இருக்கும் சின்ன குழியானது மூச்சு விடுவதற்கேப அசைவதை கவனிக்க முடியும். இதனை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். சில மாதங்களில் இந்தக் குழி மறைந்துவிடும்.

·         குழந்தைகள் கைவிரல்களை பெரும்பாலான நேரம் இறுக்கமாக மூடிக்கொண்டு இருப்பதுதான் இயல்பு என்பதால் இதைக்கண்டு அச்சப்படத் தேவையில்லை.

இதுதவிர பிறந்த குழந்தைக்கு கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்கள்தான் தெரியும். வளரும்போது மற்ற வண்ணங்கள் அறிமுகமாகின்றன. இதுமட்டுமின்றி யாரும் அடையாளம் காட்டாமலே தாயின் குரலை மட்டும் பிள்ளையால் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதும் ஆச்சர்யமான விஷயம் ஆகும்.