ஒரே டி20 போட்டியில் 134 ரன்கள்! 8 விக்கெட்டுகள்! கிருஷ்ணப்பா கௌதம் ருத்ரதாண்டவம்!

KPL போட்டிகளில் கிருஷ்ணப்பா கௌதம் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.


ஷிமோகா லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ,பெல்லாரி டஸ்கர் அணியை சேர்ந்த  கிருஷ்ணப்பா கௌதம்  39 பந்துகளில் 100 ரன்களை குவித்து சாதனை படைத்தார்.இவர் இந்த போட்டியில் 56 பந்துகளில் 134 ரன்களை குவித்தார் . 

பேட்டிங்  மட்டுமில்லாமல் பந்து வீச்சிலும் அபாரமாக செயல்பட்டு 8 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை நிலைகுலையச் செய்தார் . இதன்மூலம் கே பி எல்  போட்டிகளில் இவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் .

கே பி எல் போட்டிகளில் அதிக ரன்களை ஒரு போட்டியில்  எடுத்த வீரர் என்ற சாதனையையும்,13 சிக்சர்களை அடித்து அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இவர் பந்து வீச்சில் 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.