2வது கல்யாணம் செய்த கவுசல்யாவுக்கு ரூ.3 லட்சம் அபராதம்! காலில் விழுந்து கதற வைத்த கும்பல்!

ஆணவக் கொலை விவகாரத்தில் உயிர் பிழைத்த கெளசல்யா, சக்தியை திருமணம் முடித்துக்கொண்ட விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. இந்த நிலையில் கெளசல்யாவை கதறக்கதற விசாரணை என்ற பெயரில் கொளத்தூர் மணி குருப் மிரட்டியது தெரியவந்துள்ளது.


ஆணவக் கொலை பாதிப்புக்கு வாழும் அடையாளமாக இருக்கும் கெளசல்யா, பறை கற்றுக்கொண்டதும், பறை சொல்லிக்கொடுத்த சக்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த நிலையில், கெளசல்யாவை திருமணம் செய்துகொண்ட சக்தி ஏற்கெனவே காதல் என்ற பெயரில் பல பெண்களை ஏமாற்றியவர் என்று புகார் கிளம்பியது. இந்த விவகாரம் தெரிந்துதான் கெளசல்யா ஏற்றுக்கொண்டார் என்பதும் குற்றமாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சக்தியால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் கொளத்தூர் மணியிடம் நியாயம் கேட்டிருக்கிறார். என்னைக் காதலித்து ஏமாற்றிய சக்தியின் திருமணத்துக்கு எப்படி நீங்கள் சாட்சியாகப் போகலாம் என்று கேட்டிருக்கிறார். தனக்கு நியாயம் வேண்டும் என்று அடம் பிடிக்கவே, கடந்த 27ம் தேதி பஞ்சாயத்தைக்கூட்டியிருக்கிறார் கொளத்தூர் மணி.

இந்த பஞ்சாயத்துக்கு கவிஞர் தாமரையால் கைவிடப்பட்ட தியாகு, போராளி வளர்மதி, பாரதி மற்றும் பல புரட்சிப்புயல்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள். இவர்களிடம் நடந்த விஷயத்தை சொல்லியிருக்கிறார் காதலிக்கப்பட்ட பெண். அந்தப் பெண்ணை காதலித்த்து உண்மை, இருவரும் நெருங்கிப் பழகியதும் உண்மை. ஆனால், அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டதால்,  பிடிக்கவில்லை என்று சொல்லி முறைப்படி விலகிவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார் சக்தி.

ஆனால், அதனை மேற்படி பஞ்சாயத்தார் ஏற்றுக்கொள்ளவில்லையாம்  அதெப்படி காதலித்த பெண்ணை கைவிட முடியும் என்று கொந்தளித்திருக்கிறார்கள் ஏனென்றால் இவர்கள் அனைவரும் அப்படிப்பட்ட காதல் தியாகிகள்தானே... அதனால்  ஒரு முறை காதலித்துவிட்டால், காதலித்த பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும். காதலித்த பெண்ணை கைவிட்டு  சக்தி மிகப்பெரும் தவறு செய்திருக்கிறார்  என்ற முடிவுக்கு பஞ்சாயத்து வந்திருக்கிறது. அது மட்டுமல்ல, சக்தி மட்டுமின்றி கெளசல்யாவும் தவறு செய்தவள் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

அதாவது சக்தி ஏற்கெனவே ஒரு பெண்ணை காதலித்திருக்கிறான் என்பது தெரிந்தும், அவனை கல்யாணம் செய்துகொண்டது மன்னிக்க முடியாத குற்றமாம். அதனால் இருவரும் அந்தப் பெண்ணிடமும் சபையிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.  அந்த இடத்தில் வேறு வழியில்லாமல் இருவரும் அனைவரிடமும் தரையில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.

விஷயம் அத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை, அதற்கு மேலும் இவர்கள் செய்த தவறுக்கு தீர்ப்பு சொல்லியிருக்கிறார்கள் அதாவது இனிமேல் ஆறு மாத காலத்திற்கு சக்தி பறை அடிக்கக்கூடாதாம். அது மட்டுமின்றி, ஆறு மாத காலத்துக்குள் அபராதமாக 3 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது, அதாவது இந்த பஞ்சாயத்துக்கு மேல் முறையீடு கிடையாதாம்.

அதாவது கொளத்தூர் மணி மற்றும் தியாகுவின்  பஞ்சாயத்துதான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பாம். இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கெளசல்யாவை காலையில் 10 மணிக்கு டார்ச்சர் செய்த பஞ்சாயத்து டீம் இரவு 8 மணிக்குத்தான் விடுதலை செய்ததாம். அப்பாவிகள் கிடைத்தால், இந்த டீமுக்கு அல்வா சாப்பிட்டது போல்... நல்லா வைச்சு செஞ்சிருக்காங்க.

ம்... அந்த அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தா இப்படியெல்லாம் கட்டப்பஞ்சாயத்து நடக்குமான்னு நினைகாம இருக்க முடியலை... பெண்ணியம் பேசும் புதுமைப் பெண்க்ள் எல்லாம் எங்கே இருக்கீங்கம்மா...?