நான் என் அப்பா - அம்மா கூட தான் இருக்க போறேன்..! காதல் திருமணம் செய்த கணவனுக்கு ஷாக் கொடுத்த புதுப்பெண்!

கோவையில் புதிதாக சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண் சக்தி தமிழினி, தன்னை தன்னுடைய பெற்றோர் கடத்தி செல்ல வில்லை என்றும் நான் விருப்பப்பட்டுதான் அவர்களோடு சென்று உள்ளேன் என்றும் போலீசாரிடம் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவையில் துடியலூர் இடையர் பாளையம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். சக்தி தமிழனி பிரபா என்ற இளம்பெண் திருச்சியை சேர்ந்தவர் ஆவார். கார்த்திகேயனும் சக்தி தமிழனி பிரபாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி சாதி மறுப்பு திருமணத்தை செய்து கொண்டனர். இரு வீட்டாருக்கும் தெரியாமல் செய்து கொண்ட இந்த திருமணத்தை கார்த்திகேயனின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். ஆனால் சக்தி தமிழனி பிரபாவின் பெற்றோர் திருமணத்தை ஏற்க மறுத்துள்ளனர்.

திருமணம் முடிந்த கையோடு தம்பதியினர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று முறையாக தங்களுடைய திருமணத்தை பதிவு செய்துள்ளனர். பின்னர் கார்த்திகேயன் அவரது மனைவியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக கார்த்திகேயன் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்த சக்தி தமிழனி பிரபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகிய அனைவரும் கார்த்திகேயன் மற்றும் அவரது தாயார் வசந்தகுமாரி ஆகியோரை தாக்கி சக்தி தமிழனி பிரபாவை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு தாங்கள் வந்த காரில் கடத்தி சென்றுள்ளதாக அவரது கணவர் கூறியிருக்கிறார். 

இந்த தகராறில் காயமடைந்த கார்த்திகேயன் மற்றும் அவரது தாயார் வசந்தகுமாரி அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதனையடுத்து கார்த்திகேயன் உடனடியாக துடியலூரில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று. தன்னுடைய மனைவியை அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாகவும் தன்னையும் தனது தாயாரையும் பலமாக தாக்கியுள்ளதாக புகார் அளித்திருக்கிறார். மேலும் அவர் தன்னுடைய மனைவியை அவரது பெற்றோர் ஆணவக்கொலை செய்து விடவும் அதிக வாய்ப்பு உள்ளதால் அவரை கூடிய விரைவில் மீட்டு தரும்படி போலீசாரிடம் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்த புகாரை பெற்றுக்கொண்ட துடியலூர் காவல் நிலைய அதிகாரிகள் கடத்தப்பட்டதாக கூறப்படும் சக்தி தமிழினியை விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் சக்தி தமிழினி தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தன் விருப்பப்பட்டுதான் தனது பெற்றோருடன் சென்றதாகவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய பெற்றோர் உடன் செல்வது கணவருக்கு பிடிக்கவில்லை என்பதால் தான் அவர் இம்மாதிரியான புகார் அளித்திருக்கிறார் என்றும் போலீசிடம் சக்தி தமிழனி கூறியிருக்கிறார். மேலும் பேசிய சக்தி எனக்கு கணவரும் முக்கியம் தாய் தந்தையும் முக்கியமாகும். ஆகையால் ஒரு வார காலம் என்னுடைய பெற்றோர் வீட்டில் இருந்து அவர்களை சமாதானம் செய்து விட்டு பின்னர் என்னுடைய கணவர் வீட்டுக்கு சென்று விடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.  

மேலும் இதுகுறித்து சக்தி தமிழினியின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் எங்கள் மகள் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ஒருவரை செய்துகொண்டது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அது மட்டுமில்லாமல் அவர்கள் இருவருக்குமிடையே 11 வயது வித்தியாசம் உள்ளது. நல்ல வேலையும் இல்லாத சூழ்நிலையில் எங்கள் மகளது வாழ்க்கை என்னவாகுமோ என்ற அச்சத்தில் நாங்கள் இருந்து வருகிறோம் என்று கூறியிருக்கின்றனர். 

சக்தி தமிழினியின் பெற்றோரின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு கார்த்திகேயனிடம் விசாரித்த பொழுது நான் சக்தி தமிழினியை இரண்டாவது தாரமாக தான் திருமணம் செய்து கொண்டு இருக்கிறேன் எனக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆன அனைத்துமே அவருக்கு நன்றாக தெரியும் நான் எதையுமே அவரிடம் மறைக்கவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் தன்னுடைய மனைவி சக்தி தமிழிலேயே தன்னிடம் பேச வைக்குமாறு போலீசாரிடம் கூறியிருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.