நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் சாதனையை முறியடித்த கோமாளி!

சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் முதல் வாரத்தை காட்டிலும் இரண்டாம் வாரத்தில் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


கடந்த வாரம் ஜெயம் ரவி நடிப்பில் , பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது . 

இந்நிலையில் இரண்டாம் வாரத்தில் கோமாளி திரைப்படம் 335 திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. ரசிகர்களிடையே கிடைத்த அமோக வரவேற்பால் முதல் வாரத்தை காட்டிலும் இரண்டாம் வாரத்தில் அதிகமான திரையரங்குகளில் கோமாளி படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் இந்த வருடத்தில் வெளியான தமிழ் திரைப்படங்களில் கோமாளி திரைப்படம் மட்டுமே இரண்டாம் வாரத்தில் அதிகமான அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை காட்டிலும் கோமாளி திரைப்படத்திற்கு இரண்டாம் வாரத்தில் அதிகமான திரையரங்குகள் கிடைத்துள்ளது . 

இதன் மூலம் ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படம் , விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை ஆகிய திரைப்படத்தின் சாதனைகளை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .