ரஸ்ஸலின் ருத்ர தாண்டவம்! கதறிய டெல்லி கேபிட்டல்ஸ் பவுலர்கள்!

டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 185 ரன்களை குவித்துள்ளது.


முதலில் பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க முடியாமல் வந்த வேகத்தில் அவுட் ஆகி வெளியேறினர்.

ஒரு கட்டத்தில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருந்தது. இந்த நிலையில் கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் அண்ட்ரெ ரஸ்ஸல் தொடக்கத்தில் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. பின்னர் சிறிது நேரத்திற்கு பின்பு அண்ட்ரெ ரஸ்ஸல் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கி ருத்ர தாண்டவம் ஆடினார்.அண்ட்ரெ ரஸ்ஸல் 28 பந்துகளில் 62 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

தினேஷ் கார்த்திக் 50 ரன்களை சேர்த்தார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை குவித்தது.டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஹர்ஷல் படேல் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.