என்னா அடி! ரவுண்டு கட்டி கதறவைத்த ரானா, ரஸ்ஸல்! ரூல்ஸ் பேசின அஸ்வினுக்கு ரூல்ஸ் வச்ச ஆப்பு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 218 ரன்களை குவித்துள்ளது.


டாஸ் வென்ற கிங்ஸ் XI பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 10 ரன்களுக்கு ஷமி பந்து வீச்சில் அவுட் ஆனார்.இன்றைய போட்டியில் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரேன் அதிரடியாக விளையாடி 9 பந்துகளுக்கு 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் உத்தப்பா மற்றும் நிதிஷ் ரானா ஜோடி அபாரமாக விளையாடி கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. ராணா 34 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அவுட் ஆக, பின்னர் களமிறங்கிய அதிரடி மன்னன் ரஸ்ஸல் அவர் பங்கிற்கு கிங்ஸ் XI பஞ்சாப் அணியை அடித்து நொறுக்கினார் . இவர் 17 பந்துகளில் 48 ரன்களை குவித்து அவுட் ஆனார். உத்தப்பா அவுட் ஆகாமல் 67 ரன்களை எடுத்தார்.இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை குவித்தது.

ரஸ்ஸல் 3 ரன்கள் எடுத்திருந்த போது ஷமி  வீசிய பந்தில் அவர் போல்ட் ஆனார். அனால் 3 பீல்டர்கள் உள்வட்டத்துக்குள் இருந்ததால் அந்த பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ரஸ்ஸல் அடுத்து சிறப்பாக விளையாடி 48 ரன்களை எடுத்தார்.