உதயநிதிக்கு சீட் கொடுக்கலைன்னா அம்புட்டுத்தான்..? ஸ்டாலினிடம் கொந்தளித்த கிச்சன் கேபினட்

உதயநிதி வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஐ.பேக் ரிப்போர்ட்தான். உதயநிதிக்கு. கட்சியில் எப்பதவியும் கொடுக்க வேண்டாம். அதேபோன்று தேர்தலில் போட்டியிட சீட் வழங்கக்கூடாது. மீறிச் செய்தால், திமுக தோல்விக்கு நாளை என்னை எதுவும் கேட்கக்கூடாது" எனக் கறாராகச் சொல்லி இருக்கிறார்.


இது ஒருபுறம் இருக்க, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்தார் உதயநிதி. இப்படி உதயநிதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை பார்த்து, திமுக மூத்த நிர்வாகிகள் பலரும், தங்களது பிள்ளைகளுக்கு 'சீட்' கேட்டு கட்சித் தலைமையிடம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

குறிப்பாக, முதன்மை செயலாளர் கே.என்.நேருவின் மகன் அருண், கடலூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் எம்.ஆர்.கே.பி.கதிரவன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் எ.வ.வேலுவின் மகன் டாக்டர் கம்பன் உள்பட வந்து குவிந்துள்ள வாரிசு விருப்ப மனுக்களின் எண்ணிக்கையைப் பார்த்து அறிவாலயமே அதிர்ந்து போய்விட்டதாம்.

இதனையடுத்தே, "சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்த உதயநிதி தேர்தலில் போட்டி இல்லை" என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், "எங்களது வாரிசுகளுக்கு 'சீட்' கேட்காமல் இருப்பதற்காக ஸ்டாலினும், உதயநிதியும் சேர்ந்து நடத்தும் நாடகம் இது. 'உதயநிதிக்கே சீட் இல்லை... அதனால் நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்குக் கேட்காதீர்கள்' என எங்களிடம் சொல்வதற்காக இப்படி ஒரு தகவலை பரப்புகிறார்கள்.

இந்த தகவல் அறிந்து தி.மு.க.வின் கிச்சன் கேபினட் கொதித்தேவிட்டதாம். யாரோ ஒருவருடைய பிள்ளைகளுக்கு சீட் கொடுக்க முடியாது என்பதற்காக உதயநிதிக்கு சீட் கொடுக்க மறுப்பதா என்று டென்ஷன் ஆனாராம். எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறார் ஸ்டாலின். பரிதாபம்தான்.