ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான IPL போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அஸ்வினின் ராஜதந்திரத்தால் வென்ற கிங்ஸ் XI பஞ்சாப் !
டாஸ்
வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்து,கிங்ஸ் XI பஞ்சாப் அணியை பேட்டிங்
செய்ய பணித்தது.
தொடக்க
ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் கிறிஸ் கெய்ல் உடன் மாயங்
அகர்வால் இனைந்து ரன்களை சேர்த்தனர்.
மாயங்
அகர்வால் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒரு புறத்தில் கிறிஸ் கெய்ல் மட்டும் சிக்ஸ்ர் மற்றும் பவுண்டரிகளை விளாசினார். இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினார். இவர் 47 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சர்ப்ராஸ்
கான் சிறப்பாக விளையாடி 46 ரன்களை எடுத்தார்.இதனால் கிங்ஸ் XI பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களை குவித்தது. பெண் ஸ்டோக்ஸ் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர்
களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்சின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹானே மற்றும் பட்லர் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர்.ரஹானே 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் பட்லர் உடன் இனைந்து அதிரடியாக ரன்களை சேர்த்தனர்.
சிறப்பாக
விளையாடிய பட்லரை அஸ்வின் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் செய்தது ஆட்டத்தில் மிகுந்த
பரபரப்பை ஏற்படுத்தியது. நான் ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்த பட்லர் அஸ்வின் பந்து வீசும்
முன்னதாக கிரீஸை விட்டு வெளியே நகர்ந்தார். இதனால் பந்து வீசும் முன்பே அஸ்வின் பந்தை
ஸ்டம்ப்இல் அடித்து நடுவரிடம் அவுட் அப்பீல் செய்தார்.நீண்ட விவாததுக்கு பின் பட்லர்
அவுட் என அறிவிக்கப்பட்டார்.
ஒரு
ஆண்டு தடைக்கு பின் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 20 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் களமிறங்கிய அணைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை மட்டுமே எடுத்தது.இதனால் கிங்ஸ் XI பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.