கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக பெண்கள் நிர்வாணமாக ஓட வேண்டும் என்று ஐவரிகோஸ்ட் மன்னர் விரைவில் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண்கள் நிர்வாண ஊர்வலம்..! கொரோனாவை விரட்ட நூதன செயலில் ஈடுபடும் நாடு!

மேற்கு ஆஃப்ரிக்கா நாடுகளில் ஒன்று ஐவரி கோஸ்ட். இங்கு மன்னராட்சி நடைபெற்று வருகிறது. நாட்டு மன்னரின் பெயர் ஏமன் என்'டுஃப்பூ. இங்கும் கொரோனா வைரஸ் தன்னுடைய கோரத்தாண்டவத்தை தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில் அந்நாட்டில் சென்ற வாரம் இந்த வைரஸை ஒழிப்பதற்காக பேயோட்டுதல் விழாவை மன்னர் நடத்தியுள்ளார். எப்போதும் போல இந்த விழாவில் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கவில்லை. வெறும் நூற்றுக்கணக்கானவர் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டனர். வைரஸ் தாக்குதலுக்கு பயந்து கொண்டு பெரும்பாலானோர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
அப்போது மன்னர், " கடவுளிடம் ஒன்றுதான் வேண்டிக்கொள்கிறேன். எப்படியாவது என் நாட்டு மக்களின் இந்த வைரஸில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலகிலிருந்தே இந்த வைரஸ் வெகுவிரைவில் ஒழிய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இன்றுவரை மன்னர் பொதுமக்களின் உரையாற்றவில்லை. தற்போது பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் செல்லும் வழிமுறைகளை நடத்திட வேண்டும் என்று மன்னர் விரும்புவதாக பலதரப்பட்ட செய்திகள் கூறுகின்றன.
இந்த சம்பிரதாயமானது ஊர்வலம் நடப்பதற்கு முன்பு வரை யாரிடமும் தெரிவிக்கப்படாது என்றும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் கட்டாயமாக வீட்டிற்குள்ளேயே இருப்பர் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.