காதல் கணவன் கொலை! மிரட்டும் 10 பேர்! கருணை கொலை செய்யுங்கள்! குழந்தைகளுடன் கதறும் இளம்பெண்!

தன்னையும் தன் குழந்தையையும் கருணைக்கொலை செய்துவிடுங்கள் என்று பெண்ணொருவர் அமைச்சரிடம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆரணி டவுனிலுள்ள பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் யோகானந்தம். இவருடைய மனைவியின் பெயர் ஆண்டனிமேரி. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். யோகானந்தத்திற்கு சூதாட்டப்பழக்கமுள்ளது.

சென்ற மாதம் சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறினால் இவர் பேருந்து நிலையத்திற்கு அருகே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஆண்டனிமேரி நேற்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் மனு ஒன்று அளித்தார். அதில் அவர் குறிப்பிட்டடிருந்தது.

என் பெயர் ஆண்டனிமேரி. கடந்த மாதம் 11ஆம் தேதியன்று என்னுடைய கணவர் யோகானந்தம் அவருடைய உறவினர் பாண்டியன் என்பவரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். தற்போது நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பலர் எங்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதனால் நாங்கள் மிகவும் அச்சத்தில் உள்ளோம். இது சம்பந்தமாக ஆரணி காவல்  நிலையத்தில் புகாரளித்தும் எந்தவித பயனுமில்லை. எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில் எங்கள் மூன்று பேரையும் கருணைக்கொலை செய்து விடுங்கள்" என்று எழுதியிருந்தார்.

இந்த சம்பவமானது ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.