வயசு 17 தான்..! இப்போ 7 மாச கர்ப்பம்! எனக்கு அதை மட்டும் கொடுத்துடுங்க! பெண் டாக்டர் வழக்கில் கொல்லப்பட்டவரின் மனைவி கதறல்! ஏன் தெரியுமா?

என் கணவரை கொன்ற இடத்திலேயே என்னை சுட்டுக் கொன்றுவிடுங்கள் என்று தெலுங்கானா கற்பழிப்பு குற்றவாளியின் மனைவி ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர், 4 லாரி ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இன்று 4 குற்றவாளிகளும் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான சின்ன கேசவலு என்பவரின் மனைவி காவல் துறையினரிடம் ஒரு முறையீட்டை முன்வைத்துள்ளார். 

"எங்கள் இருவருக்கும் திருமணமாகி 1 வருடமே ஆகியுள்ளது. தற்போது நான் மாசமாக உள்ளேன். என் கணவரை சுட்டுக்கொன்ற அதே இடத்திலேயே என்னையும் சுட்டுக்கொலை செய்து விடுங்கள்" என்று அழுது புலம்பியுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு சின்னகேசவலுவின் தாயார் என் மகனே எரித்து கொன்று விடுங்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.