பிக்பாஸ் பைனல்! கவின் கையில் டிராபியை கொடுத்த கமல்! ஆர்ப்பரித்த அரங்கம்! எதற்கு தெரியுமா?

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் கேம் சேஞ்சர் விருதை கவின் வென்றுள்ளார்.


பிக் பாஸ் 3 நிகழ்ச்சிகள் பைனல் தற்போது நடைபெற்று வருகிறது. வெற்றியாளர் மட்டுமல்லாமல் சிறப்பாக செயல்பட்ட 4 பேருக்கு கமல் சார்பில் விருது கொடுக்கப்பட்டது.

அந்த வகையில் கேம் சேஞ்சர் எனும் விருதை கவினுக்கு நடிகர் கமல் கொடுத்துள்ளார். கவின் மட்டும் 5 லட்சம் ரூபாயுடன் வெளியேறாமல் இருந்திருந்தால் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்களுடன் நடந்திருக்கும் என்று கமல் கூறியுள்ளார்.

எனவேதான் கேம் சேஞ்சர் விருதை கவிஞனுக்கு கொடுத்துள்ளதாக கமல் கூறியுள்ளார். விருதைப் பெற்றுக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் கவின் காணப்பட்டார்.