கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடைபாதை வியாபாரி ஒருவர் உதவிய சம்பவமானது அனைவரையும் நெகிழ செய்துள்ளது.
பக்ரீத் விற்பனைக்கு வந்த புதுத்துணிமணி! வெள்ள நிவாரணத்திற்கு அள்ளிக் கொடுத்த சாலையோர வியாபாரி! நெகிழ வைத்த நவ்சத்!

சென்ற வாரத்திலிருந்து கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த இயற்கை பேரிடரால் பலதரப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக உலகின் பல்வேறு இடங்களிலும் மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
கேரளா மாநிலத்தில் கொச்சியில் நகரம் அமைந்துள்ளது. இப்பகுதியில் நடைபாதை வியாபாரியாக நவ்ஷத் என்பவர் பணியாற்றி வருகிறார். தன்னுடைய கடையில் பக்ரித் பண்டிகைகாக புது துணிகளை வாங்கி அடுக்கி வைத்திருந்தார்.
அப்போது நிவாரணத்திற்கு உதவுமாறு அவரிடம் வந்து கேட்டனர். தான் புதிதாக வாங்கி வைத்திருந்த அனைத்து துணிகளையும் அவர்களுக்கு தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதற்கு நிவாரணம் பெற வந்தவர்கள் அனைத்து பொருட்களையும் எங்களுக்கு கொடுத்தால் உங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்று கூறினார். அதற்கு நவ்ஷத் "ஆபத்தில் இருக்கும் மக்களை பாதுகாக்கவே மனநிறைவை தரும் என்று அல்லாஹ் கூறியுள்ளார்" என்று பதிலளித்தார்.
இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.