ஒரே வீட்டில் 2 காதல் மனைவிகள்! 2 குழந்தைகள்! பொறாமை பட வைக்கும் இளைஞர்!

ஒரே வீட்டில் 2 காதல் மனைவிகளுடன் வாழ்ந்து வரும் நபர் எவ்வித சச்சரவும் இல்லாமல் வசித்து வருவது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


 கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பசீர் பாஸி. இவர் அம்மாநிலத்தில் மிகப்பிரபலமான தொழில் அதிபர். மேலும் இவர் தன்னை டிஜே பசீர் என்றே அழைக்க விரும்புகிறார். காரணம் இவர் ஓட்டல்களில் டிஜேவாகவும் செயல்பட்டு வருகிறார்.

மேலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் பிக்பாஸ் மலையாள நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் பசீர். சமூக வலைதளங்களில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

32 வயதாகும் இவருக்கு பத்தாண்டுகளுக்கு முன்னர் சுஹானா எனும் பெண்ணோடு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் மூலமாக சுஹானாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தான் மசூரா எனும் பெண் மீது பசீர் காதலில் விழுந்துள்ளார்.

மனைவிக்கு தெரியும் வரை கள்ளக்காதலாக இருந்த இந்த உறவை ஒரு நாள் பசீர் தனது மனைவியிடம் கூறியுள்ளார். முதலில் இதை கேட்டு அதிர்ந்த சுஹானா பிறகு மசூராவை தனது கணவனுக்கு 2வது திருமணம் செய்து வைக்க ஒப்புக் கொண்டார்.

இதே போல் மசூராவும் கூட திருமணத்திற்கு பிறகு ஒரே வீட்டில் சுஹானாவுடம் சேர்ந்து வாழ ஒப்புக் கொண்டார். இதன்படி சில வருடங்களுக்கு முன்னர் மசூராவை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் பசீர் வாழ்ந்து வருகிறார்.

ஒரே வீட்டில் 2 மனைவிகளுடன் வசித்து வரும் பசீர் கேரளா முழுவதும் அறியப்பட்ட நபராக உள்ளார். மேலும் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

இதற்கிடையே பசீரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீங்கள் 2 மனைவிகளை திருமணம் செய்தது போல் உங்கள் மனைவிகளில் ஒருவர் 2வதாக ஒரு ஆணை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் ஒப்புக் கொள்வீர்களா? என கேட்டனர்.

அதற்கு சிறிதும் யோசிக்காமல் பசீர் நிச்சயமாக முடியாது என்று பதில் அளித்தார். இதன் மூலம் பசீர் திறந்த மனதுடன் 2வது திருமணத்தை செய்யவில்லை என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனாலும் கூட ஒரே வீட்டில் 2 மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழும் பசீரை பார்த்து பலரும் பொறாமை கூட படுவதுண்டு.