3 வயது சிறுமிக்கு 2வது முறையாக இதயத்தில்..! தவித்த தாய் - தந்தை..! கடவுள் போல் உதவிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்!

3 வயது சிறுவனின் இதய அறுவை சிகிச்சையை கேரளா அரசாங்கம்  இலவசமாக செய்த செய்தியானது அம்மாநிலத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.


கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரின்ஸ். இவருடைய மனைவியின் பெயர் ஆவனி. இத்தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு புலம்பெயர்ந்தனர். பிரன்ஸ் ரயில்வே ஊழியராகவும், ஆவணி செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். 

இவர்களுடைய இளைய மகளுக்கு பிறவியிலிருந்தே இதயக்கோளாறு இருந்து வந்தது.  1 வயது இருக்கும் போது கேரளாவில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது 3 வயது நிரம்பிய நிலையில் மீண்டும் அந்த குழந்தையின் உடல்நிலை மோசமானதால் இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கொச்சி அமிர்தா மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்குள் கொரோனா நோய் தாக்குதல் தொடங்கியது. ஆவணி தன்னுடைய செவிலியர் பணியை ராஜினாமா செய்வதற்கும், பிரன்ஸ் தனக்கு பணியிடமாற்றம் பெற்றுக்கொள்ளவும் குழந்தைகளை பாட்டியிடம் விட்டுவிட்டு உத்தரப்பிரதேசம் சென்றுள்ளனர். எதிர்பாராவிதமாக அப்போதுதான் நாடு முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தம்பதியினரால் மீண்டும் கேரளாவுக்கு வர இயலவில்லை. 

இதற்கிடையே மருத்துவ நிர்வாகத்தினர் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். தன்னிடம் தனியாக உள்ள குழந்தைக்கு எவ்வாறு அறுவை சிகிச்சை செய்வது என்று குழந்தையின் பாடாடி திகைத்துள்ளார். 

அப்போது கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சரான ஷைலஜா அவர்களை தொலைக்காட்சியின் மூலம் தொடர்புகொண்ட ஆவணி தன்னுடைய நிலையை எடுத்துரைத்துள்ளார். விவரங்களைப் பெற்று கொண்ட அமைச்சர், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

உத்திரப்பிரதேசத்திலிருந்து சென்ற மாதம் 15-ஆம் தேதியன்று தம்பதியினர் கேரளா வந்துள்ளனர். இதனிடையே குழந்தைக்கு சென்ற மாதம் 22 மற்றும் 25-ஆம் தேதிகளில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்ட பிறகு 29-ஆம் தேதி பெற்றோர் குழந்தையுடன் இணைந்தனர்.

தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாகவும், தங்களுடைய குழந்தையின் உயிரை காப்பாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் கேரளா அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தம்பதியினர் கூறியுள்ளனர். கேரளா அரசின் இந்த முயற்சியானது அம்மாநில மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது.