சில தினங்களுக்கு முன்பு கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.
எங்கப்பா ஓடிட்டர்! வைரலாகும் கேரள சேச்சி வீடியோ! யார் தெரியுமா?

இந்த விழாவிற்கான வாழ்த்துக்களை பலதரப்பினரும் கேரள மக்களுக்கு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓணம் பண்டிகையை அடுத்து நடிகை நிவேதா தாமஸ் , நடிகை பார்வதி நாயர் போன்ற கேரளத்து பைங்கிளிகள் அனைவரும் தங்களுடைய ஓணம் விழாவினை மகிழ்ச்சியாக கொண்டாடினர். அந்த விழா கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களையும் பெற்றனர்.
இது போலவே சமூக வலைத்தளத்தில் தற்போது கேரள பெண் ஒருவரும் தமிழ்நாட்டை சேர்ந்த ஆண் ஒருவரும் உரையாடுவது போன்ற ஒரு வீடியோ பதிவு வைரலாக பரவி வருகிறது. கேரள பெண் மலையாளத்தில் பேச அதன் நடுவில் தமிழில் நகைச்சுவையாக பேசும் அந்த இளைஞனின் உரையாடல் மிகவும் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது என்றே கூறலாம். எடுத்துக்காட்டாக உங்கள் அப்பா என்ன வேலை செய்கிறார் என்று அந்த இளைஞன் அந்த பெண்ணிடம் கேட்கிறார் . அதற்கு அந்த பெண் , அப்பா ஓடிட்டர் என்று பதில் அளிக்கிறார்.
இதைப் பார்ப்பதற்கு நகைச்சுவையாக காணப்படுகிறது.