30 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரூ.200 கடன்! திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்ய எம்பி! நெகிழ வைக்கும் சம்பவம்!

ரூபாய் 200 கடனை கொடுக்க 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வந்த கென்யா எம்.பி,கென்யா நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ரிஸ்சர்டு டாங்கி


இந்தியாவில் உள்ள அவுரங்காபாத் நகரில் தான் படித்த காலத்தில் மளிகை கடைகாரருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் 200 ரூபாய் கடன்பட்ட கென்யா நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் அதை திருப்பி செலுத்திய வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கென்யா நாட்டின் யாரிபாரி பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் ரிஸ்சர்டு டாங்கி.

அவர் 1985 முதல் 1989 ஆண்டு வரை மஹராஷ்ர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மேலாண்மை கல்வி பயின்று வந்தார். கல்வி பயின்ற காலத்தில் ரிஸ்சர்டு டாங்கி தான் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் உள்ள மளிகை கடை ஒன்றில் தனக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

சில சமயங்களில் போதிய பணம் இல்லாதபோதும் மளிகை கடையில் கடன் வாங்கி அதை தனது பெற்றொரிடமிருந்து பணம் வந்த பின்னர் பாக்கி தொகையை கடை உரிமையாளரான காசிநாத் என்பவரிடம் திருப்பி கொடுக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார். 

இந்நிலையில் தனது மேலாண்மை கல்வி படிப்பை 1989-ல் நிறைவு செய்த ரிஸ்சர்டு தனது சொந்த நாடான கென்யாவுக்கு சென்றார். அப்போது காசிநாத் ஹவ்லியின் மளிகை கடையில் ரிஸ்சர்டு பெயரில் 200 ரூபாய் கடன் தொகை இருந்தது. கென்யா திருப்பிய ரிஸ்சர்டு மளிகை கடையில் உள்ள பாக்கி தொகையை எப்படியாவது திருப்பி செலுத்திவிட வேண்டும் என எண்ணினார்.

ஆனால் நாடு திரும்பிய அவர் அரசியல் கட்சியில் இணைந்து யாரிபாரி பாராளுமன்ற உறுப்பினரானார். தற்போது, 30 ஆண்டுகளுக்கு பின்னர் தன் கல்லூரி படிப்பு காலத்தில் காசிநாத் ஹவ்லியின் மளிகை கடையில் வாங்கிய 200 ரூபாய் பாக்கியை திருப்பி கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தார். இதையடுத்து தனது மனைவியுடன் கடந்த திங்கள் கிழமை  மும்பை வந்த ரிஸ்சர்டு தனக்கு கடன் வழங்கிய மளிகை கடைகாரர் காசிநாத் ஹவ்லியை தீவிர தேடுதலுக்கு பின் கண்டுபிடித்தார். 

நிலையில் அதிக போராட்டத்திற்கு பின்னர் ஒருவழியாக மளிகை கடை உரிமையாளரை நேரில் சந்தித்த ரிஸ்சர்டு 30 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கடன் வைத்த 200 ரூபாய் பணத்தை திருப்பி அளித்து தனக்கு கடன் கொடுத்ததற்கும் நன்றி தெரிவித்தார். மேலும், கென்ய நாட்டுக்கு தனது விருந்தினராக வரும்படி காசிநாத்  ரிஸ்சர்டு அழைப்பு விடுத்தார்.

200 ரூபாய் பணத்தை கொடுக்க பல ஆண்டுகள் கழித்து ரிஸ்சர்டு நாடுகடந்து வந்தது மிகவும் நெகிழ்ச்சியான தருணம் என்றும் இதை தனது வாழ்நாளில் மறக்கவே முடியாத நிகழ்வு என மளிகை கடை உரிமையாளர் காசிநாத் தெரிவித்தார். மற்றும் தனது வீட்டிற்கு வந்தான் அடையாளமாக காசிநாதன் உறவினர்கள் அவர்களுக்கு உணவு விருந்து அளித்துள்ளனர் மற்றும் பல பரிசுகளையும் அவர்களுக்கு கொடுத்துள்ளனர் அவரது மனைவிக்கு பட்டுப்புடவையை பரிசாகவும் அளித்துள்ளனர்.

இந்நிலையில் ரிஸ்சர்டு 'எனக்கு நேர்மையைச் சொல்லிக் கொடுத்ததே இந்தியர்கள் தான் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும்' என மெய் சிலிர்க்க வைத்திருக்கிறார்.