ராகுலை விளாசிய கெஜ்ரிவால்! டெல்லியில் 7 எம்பிக்களை கன்பார்ம் செய்த பாஜக! மோடி செம ஜாலி!

ஒரே ஒரு சீட் விவகாரத்தில் கூட்டணி அமைய இருந்ததை ராகுல்காந்தி கெடுத்துவிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.


அரசியலில் கூட்டணி அமைக்கவேண்டிய அவசியத்தில் நாங்கள் இல்லை. ஆனால், நரேந்திரமோடி மீண்டும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் காங்கிரஸ் கூட்டணிக்கு சம்மதித்தோம். நாங்கள் ஆளும் கட்சி என்பதால் கூடுதலாக இடம் எதிர்பார்ப்பதில் என்ன தவறு என்று கேட்டிருக்கிறார்.

மேலும், இந்தத் தேர்தலில் மோடிக்கு எதிரான வெறுப்பு அலை வீசுகிறது. ஆனால் இதையும் தாண்டி மோடி ஜெயித்துவிட்டால், அதற்கு முழு பொறுப்பையும் ராகுல்காந்திதான் ஏற்க வேண்டும். அவரது தவறான அணுகுமுறையே காரணமாக இருக்கும் என்று விளாசியிருக்கிறார்.

முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சத் கொடுத்த அறிவுரைப்படியே கூட்டணி வேண்டாம் என்று ராகுல் முடிவெடுத்தாராம். இந்த முறை காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதுதான் முக்கியம் என்று முடிவு செய்ததாலே, வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் கூட்டணியை முறிவு செய்தார் என்கிறார்கள்.

எப்படி இருந்தாலும் ஆம் ஆத்மியுடன் அமைய இருந்த கூட்டணியை தள்ளிவிட்டது ராகுலுக்கு மிகப்பெரிய இழப்பாகவே இருக்கும். இந்த சண்டையைப் பார்த்து ரசிக்கும் மோடி, ஈசியாக டெல்லியைக் கைபற்றிவிடுவார் என்கிறார்கள்.