பாஜக தொழில் அதிபர் மகனுடன் திருமணம்..! முதல் முறையாக வாய் திறந்து ரகசியம் உடைத்த கீர்த்தி சுரேஷ்!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்த செய்தி பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.


ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகர் திலகம் திரைப்படத்தின் மூலம் தனது சிறப்பான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார்.

சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பாஜக தொழிலதிபரின் மகனை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி வெளியாகியது. இந்த செய்தியை கேட்டு நடிகை கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் திரையுலக வட்டாரத்தில் கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனது திருமணம் தொடர்பாக வெளியான செய்தியை பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கமளித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர், என் திருமணம் பற்றி பரவி வரும் செய்தி எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது. இந்த செய்தி எப்படி துவங்கியது என்று எனக்கு தெரியவில்லை. மேலும் தற்போதைக்கு எனக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா ஏதும் இல்லை எனவும் அவர் கூறினார். இதன் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திருமணம் தொடர்பாக வெளியான செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.