என்ன பாலோ பண்ணி பாத்ரூமுக்குள்ள கூட வருவியா? ஷெரீனிடம் எல்லை மீறும் கவின்! பிக்பாஸ் வீட்டில் களேபரம்!

ஷெரினிடம் கடந்த சில நாட்களாக கவின் வரம்பு மீறி பேசி வருவது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.


பிக்பாஸ் 3-வது சீசன் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. சேரன், லாஸ்லியா, கவின், ஷெரின், முகென், தர்ஷன், சாண்டி ஆகியோர் தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்துவதற்கு காத்திருக்கின்றனர். இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தங்களுடைய யுத்திகளை கையாண்டு ரசிகர்களிடையே நன்மதிப்பை பெறுவதற்கு அனைத்து போட்டியாளர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கவின் ஷெரினிடம் அளவுக்கு அதிகமாக நாகரீகமற்று நடந்து வருகிறார். வரம்பு மீறி பேசுவதும், ஷெரினை ஆத்திரப் படுத்துவதையும் கவின் வழக்கமாக கொண்டுள்ளார். இந்த செயலானது பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று கவின் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டார். ஷெரின் குளிக்க சென்றபோது, பாத்ரூம் நுழைவு வரை கவின் பின் தொடர்ந்து சென்றார். கடும் ஆத்திரமடைந்த ஷெரின், "பாத்ரூம் உள்ளே வரைக்கும் வருவியா" என்று கேட்டார். அதற்கு கவின் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன், எனக்கும் டிஸன்சி தெரியும் என்று பதிலளித்தார். இந்த காட்சியானது பார்ப்பதற்கு முகம் சுளிக்கும் வகையில் அமைந்திருந்தது.

கவினின் இத்தகைய நடவடிக்கைகள் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி வருகின்றன.