தன்னுடைய முகநூலில் ரசிகர்கள் அவதூறாக கருத்துக்கள் பதிவிடுவதை அஜித் அவர்கள் தட்டிக்கேட்கமாட்டாரா என நடிகை கஸ்தூரி பொங்கி எழுந்துள்ளார். மேலும் ரசிகர்களின் ஆபாசமான கமெண்ட்டுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார் கஸ்தூரி.
ரொம்ப கேவலப்படுத்துறாங்க..! அஜித் சார் ஏதாவது செய்யுங்கள்..! விடாமல் துரத்தும் கஸ்தூரி! ஏன் தெரியுமா?

அரசியல் ரீதியாக ட்வீட்களை பதிவிட்டு சமூக வலைதளத்தில் ஆக்டிவாக உள்ளார் நடிகை கஸ்தூரி. இதனாலேயே அவர் பல பிரச்சனை அடிக்கடி சந்திது வருகிறார். நடிகை கஸ்தூரியின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அஜித் ரசிகர்கள் ஆபாசமாக கருத்து பதிவிடுவதாக கஸ்தூரி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஜித்திடம் கேள்வி எழுப்பிய கஸ்தூரி எவ்வளவு நாள் அமைதியாக இருப்பீர்கள், உங்க ரசிகர்கள் கேவலமாக பேசுவதை கண்டிக்க மாட்டீர்களா என கேட்டுள்ளார்.
கஸ்தூரி ரசிகர் ஒருவரின் டிவிட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பின்வருமாறு பதிவிட்டுள்ளார். "ஏற்கனவே இந்த நாயின் அக்கௌன்ட் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் திருந்தவில்லை. ஈழத்து சொந்தங்களே, உங்களுக்கு இந்த அற்பன் யாரென்று தெரிந்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும்." என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள கஸ்தூரியின் ரசிகர் ஒருவர், "அவங்க அம்மா வளர்த்து இருக்குற விதம் அவ்ளோதான் மேடம்.. இவனுங்க கூட சண்ட போட்டு , எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்க" என கேட்டுக்கொண்டுள்ளார்.
தனது பெயரில் போலி கையெழுத்து வெளியானதும், உடனடியாக அறிக்கை விட்ட நடிகர் அஜித், நடிகை கஸ்தூரியின், இந்த நேரடி புகார்களுக்கு, செவி சாய்த்து, தனது ரசிகர்களுக்கு ஒரு கண்டன அறிக்கை வெளியிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.