2வது பட்டனை அழுத்துங்க! தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வற்புறுத்திய பலே பெண் தேர்தல் அதிகாரி!

வாக்குச் சாவடிக்கு வந்த வாக்காளர்களை வாக்குப்பதிவு எந்திரத்தில் இரண்டாவது பட்டனை அழுத்துமாறு தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்ததாக பெண் தேர்தல் அதிகாரி மீது புகார்.


தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது போலவே கர்நாடக மாநிலத்திலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பெங்களூர் நகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த வாக்காளர் ஒருவர் வாக்களித்து விட்டு வந்து பரபரப்பு புகார் கூறினார். நான் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று பெண் அதிகாரியிடம் கேட்டபோது வாக்குப்பதிவு எந்திரத்தில் இரண்டாவதாக இருக்கும் பட்டனை அழுத்தும் அவர் கூறியதாக தெரிவித்தார்

தனக்கு மட்டுமில்லாமல் தன்னுடன் வந்த ஒரு சில வாக்காளர்களுக்கும் இரண்டாவது பட்டனை அழுத்துமாறு அந்தப் பெண் அதிகாரி கோரியதாகவும் உள்ளே சென்று பார்த்தால் வாக்குப்பதிவு எந்திரத்தில் இரண்டாவதாக தாமரை தாமரை சின்னம் இருந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பெண் அதிகாரி மீது வாக்காளர்கள் உயரதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் வாக்காளர்களின் புகாரை அந்த பெண் அதிகாரி திட்டவட்டமாக. எப்படி வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்கள் கேட்டதாகவும் அதற்கு இரண்டாவது பட்டனில் தாமரை இருக்கும் இதுபோல் ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு சின்னம் இருக்கும் உங்களுக்கு விருப்பமான சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறியதாகவும் அந்த பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.